
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே தினுஷ,இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்
சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் இன்று (24) பிற்பகல் இந்தியாவிலிருந்து விமானம் மூலம்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
34 வயதுடைய கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த கெசல்வத்தே தினுஷ என்ற நபரே இவ்வாறு அழைத்து வரப்பட்ட்டுள்ளார்.
குறித்த நபர் டுபாயில் தலைமறைவாகியிருந்து இந்தியா சென்றபோது , சென்னையில் கைது செய்யப்பட்டார் .
அங்கிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
சந்தேக நபர்,கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் காவலில் எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கெசல்வத்த பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சந்தேக நபருக்கு எதிராக கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

