நாட்டின் பல பகுதிகளில் காற்று மற்றும் மழை தொடரும்

நாட்டின் பல பகுதிகளில் காற்று மற்றும் மழை தொடரும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமைகள் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் சுமார் 75 மி.மீ. வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர் கூறியுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )