
கட்டுநாயக விமான நிலைய கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் கைவிடப்பட்டிருந்த நிலையில், 1 கோடி 68 லட்சம் மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இன்று பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
422 கிராம் குஷ் மற்றும் 01கிலோ 262 கிராம் ஹஷிஷ் போதைப்பொருட்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
கழிப்பறையை சுத்தம் செய்ய வந்த ஒரு தொழிலாளி ஒருவர் அங்கு பார்சல்கள் இருப்பதை கண்டதாகவும், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ,சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

