
போலி இந்திய பாஸ்போட்டுகளுடன் இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் கைது
போலி இந்திய பாஸ்போட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் நேற்று முன்தினம் சென்னையில் தரையிறங்கியபோது ஆவணங்களை ஆய்வு செய்த இந்திய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் போலி சென்னை முகவரியுடன் கூடிய இந்திய பாஸ்போட்டுகள் அவர்களிடமிருந்தமை கண்டறியப்பட்டது.
48 வயது பெண்ணும் அவரது 21 வயது மகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர் .
தாம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றதாக இருவரும் விசாரணையின் போது அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தனர் .
எனினும் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது .
மேலும் இந்தியாவில் அடையாளச் சான்றுகளைப் பெற அவர்கள் போலி ஆவணங்களையும் போலி இந்திய பாஸ்போரட்டுகளையும் பயன்படுத்தியமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இருவரையும் கைது செய்து சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தனர்,
மத்திய குற்றப்பிரிவினர் போலி பாஸ்போர்ட்டுகளைப் பெற உதவிய நபர்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

