பயணிகள் போக்குவரத்து ஓட்டுநர்கள் டிசம்பர் 31 ற்கு முன் பொதுப் போக்குவரத்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பயணிகள் போக்குவரத்து ஓட்டுநர்கள் டிசம்பர் 31 ற்கு முன் பொதுப் போக்குவரத்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பயணிகள் போக்குவரத்து சேவை வழங்கும் ஓட்டுநர்கள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் ”பொதுப் போக்குவரத்து உரிமம்” பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார்.

நேற்று அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் இதனைத் கூறினார்.

உரிமத்திற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் உரிமத்தைப் பெற வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

பொதுப் போக்குவரத்து தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது சீட் பெல்ட்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. சில பஸ்கள் தயாரிக்கப்பட்டபோது சீட் பெல்ட்கள் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் சிலர், பஸ்களை மேம்படுத்துகிறார்கள் ஆனால் அவர்களால் சீட் பெல்ட்கள் பொருத்த முடியவில்லை . அவர்கள் என்னையும் போலீசாரையும் ஏமாற்ற தங்கள் பிள்ளைகளின் புத்தகப் பைகளில் உள்ள பெல்ட்களை அணிவிக்கிறார்கள் .

இவ்வாறானவர்களை நம்பி 50 பயணிகளை ஒப்படைப்பது பொருத்தமானதல்ல.

பொதுப் போக்குவரத்து சேவை வழங்குபவர்கள் சற்று சீரியஸாக சிந்திப்பவர்களாகவும் அவதானத்துடன் செயற்படுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

இதனால் ,இப்போது நாங்கள் ,
பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு ஓட்டுநரும் பொதுப் போக்குவரத்து உரிமத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம்.

திட்டங்களை வகுத்துள்ளோம், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் , நாங்கள் நிச்சயமாக PT என்ற பொதுப் போக்குவரத்து உரிமத்தைப் பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளோம்.”

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )