
பாடசாலை மாணவர்கள் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பொலன்னறுவை பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா நிமிர்த்தம் வருகை தந்த பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு ஒவ்வாமையினால் நேற்று (02) மாணவர்களுக்கு வாந்தி , வயிற்றுவலி , வயிற்றுப்போக்கு , தலைசுற்று, சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைகளுக்காக அவர்கள் அனைவரையும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 10 பேர் சிகிச்சைகளின் பின் தங்களுடைய தங்கியிருந்த இருப்பிடத்துக்கு சென்றுள்ளதாகவும், 15 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் .
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுவரெலியா பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

