
நாட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்.சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மேல்முறையீட்டு நீதிமன்றதால் மீண்டும் உறுதி செய்யப்பட்டது
ஹெரோயின் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டது.
2.53 கிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமைக்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளதுடன், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
ஜெயசிங்கம் ரஜீவ் என்ற சுதாகரன்
போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கொண்டு சென்றமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2014 மார்ச் 17 அன்று கொழும்பு, மாதம்பிட்டிய பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது 2.53 கிராம் ஹெரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டார்.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் குறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேல் நீதிமன்றத் தீர்ப்பு சட்டரீதியாகத் தவறானது என்றும், சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளை நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார் என்றும் ரஜீவ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாதிட்டார்.
நீதியரசர்களான சசி மகேந்திரன் மற்றும் பி. குமாரன் ரத்தினம் ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை ஆராய்ந்தது.
இதனடிப்படையில் மேல் நீதிமன்ற நீதிபதி சாட்சியங்களைச் சரியாக மதிப்பீடு செய்துள்ளதாகவும், சட்டமா அதிபர் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கமைய, மேல் நீதிமன்றத்தின் மரண தண்டனைத் தீர்ப்பில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, ஜெயசிங்கம் ரஜீவ் என்ற சுதாகரனின் தண்டனையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

