யானை தாக்கி பெண்ணொருவர் பலி

யானை தாக்கி பெண்ணொருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதி மேற்கு பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )