தொழிற்துறை அபிவிருத்திக்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்

தொழிற்துறை அபிவிருத்திக்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்

முதலீட்டு வலயங்களுக்கான சேவை அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இன்று (07) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வரவு – செலவுத் திட்டத்துக்கான வாசிப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் காணி தகவல் உட்பட மத்திய டிஜிட்டல் கட்டமைப்புக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்காக வதிவிட விசா முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்து்ளளார்.

சர்வதேச வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்பான புதிய முறைமை ஒன்று தயாரிக்கப்படவுள்ளது. 

சிறிய மற்றும் நடுத்த அளவிலான தொழில்முனைவோருக்கு 5900 மில்லியன் ரூபாய் கடன் வழங்க ஒதுக்கிடப்படும் 

தொழிற்துறை அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )