‘INS SATPURA’ இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

‘INS SATPURA’ இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

‘INS SATPURA’ என்ற இந்தியக் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பல் அதன் விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று நாட்டிற்கு வந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர், கப்பலுக்கு சம்பிரதாய வரவேற்பு அளித்தனர்.

Frigate வகையைச் சேர்ந்த இந்த இந்திய கடற்படை கப்பல் 142.5 மீட்டர் நீளம் கொண்டது.

கப்பலில் 403 பணியாளர்களைக் உள்ளனர் .

நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் , இந்தக் கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் நாட்டின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )