கடந்த இரண்டு வாரங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 78 பேர் கைது

கடந்த இரண்டு வாரங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 78 பேர் கைது

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 78 சந்தேகநபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

35 டிங்கி படகுகள் மற்றும் ஒரு பல நாள் மீன்பிடி இழுவை படகு, அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி பொருட்கள் மற்றும் மீன்பிடி படகுகளுடன் திருகோணமலை, சம்பூர், வெருகல், கோட் பே, குச்சவெளி, கிண்ணியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள அந்தந்த மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

சட்டபூர்வ மீன்பிடிக்கு தனது முழு ஆராதரவை வழங்கும் இலங்கை கடற்படை ,சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்க சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )