சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பத் மனம்பேரி மற்றும் மின்சார சபை ஊழியர் மீதான வழக்கு இன்று (29) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

காணொளி தொழில்நுட்பத்தினூடாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து வலஸ்முல்ல நீதவான் இருவரையும் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )