
மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டி ; இந்தியா – தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் திகதி தொடங்கி நடந்து வருகிறது.
8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (02) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் கோதாவில் குதிக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ் அல்லது சினே ராணா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி, ரேணுகா சிங்.
தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், அன்னெகே பாஷ் அல்லது மசபடா கிளாஸ், சுனே லூஸ், மரிஜானே காப், சினாலோ ஜப்தா, அன்னெரி டெர்க்சன், குளோயி டிரையான், நடினே டி கிளெர்க், அயாபோங்கா காகா, மிலாபா.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

