
இந்திய அரசியலே வியந்து பார்க்கும் திருப்பம் ; MK.ஸ்டாலினுடன் CM விஜய் சந்திப்பு
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சட்டசபை கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்திலிருந்து நேரடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி வரவேற்று, சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக அரசியலில் புதிய முதலமைச்சர்கள் முன்னாள் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறும் நடைமுறை, அரசியல் மரியாதையின் அடையாளமாகவும் ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டாகவும் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜயை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கொறடா எ.வ. வேலு மற்றும் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

