முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பமானதையொட்டி, இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வை ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் பொதுச்சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து, முள்ளிவாய்க்காலின் இறுதி யுத்தக் காலத்தில் மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் உணவுக் குறைபாடுகளையும் நினைவுகூரும் வகையில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )