
17வது ஆசிய கிண்ணத் தொடர் ஆரம்பம்
17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. செப்டம்பர் 28 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் ஆசிய கிண்ணத்திற்காக போட்டியிடவுள்ளன.
திட்டமிடப்பட்ட 19 போட்டிகளில், இறுதிப் போட்டி உட்பட 11 போட்டிகள் டுபாயில் நடைபெறவுள்ளதுடன் எஞ்சிய எட்டு போட்டிகள் அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஹொங்கொங் அணியை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News

