
அடுத்த 48 மணி நேரத்தில் மகாவலி ஆற்றின் ஓரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்தில் மகாவலி ஆற்றின் ஓரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாவலி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் நேற்றிரவு(17) முதல் பெய்து வரும் மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இதனால் மகாவலி ஆற்றுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவும், வெள்ளத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்செரிக்கையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அபாயம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ,மட்டக்களப்பு-பொலன்னறுவை வீதியின் கல்லெல்ல பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதோடு சோமாவதி ரஜ மகா விகாரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான வீதியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாவதி ரஜ மகா விகாரைக்குச் செல்லத் திட்டமிடும் பக்தர்கள் அடுத்த சில நாட்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

