
“பைசல் எனக்கு கொலை மிரட்டல் விட்டார்”
பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (21) சபையில் குற்றம் சாட்டினார்.
புத்தளம் மாவட்டம் தொடர்பான ஒரு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதையடுத்து, முஹம்மட் பைசல் ஆத்திரமடைந்து தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அர்ச்சுனா சபையில் தெரிவித்தார்.
ஆனால், தம்மால் எந்தவித மிரட்டலும் விடுக்கப்படவில்லை என முஹம்மட் பைசல் வாதித்தார்.
கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் CCTV கேமராக்கள் இருப்பதாகவும், அவற்றை பயன்படுத்தி சம்பவம் தொடர்பில் நிச்சயமான விசாரணை நடத்துமாறு பிரதி சபாநாயகரிடம் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.
TAGS MP Muhammad Faisal.MP Ramanathan ArchunaNational People's Power's Puttalam DistrictSri lankaTamil National Alliancethreat

