
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சார்பில் 4 சாட்சியாளர்கள் விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் நேற்று (24) பிரதிவாதியான பொலிஸ்மா அதிபரின் சாட்சியாளர்கள் பட்டியலிலிருந்த 4 சாட்சியாளர்கள் சாட்சியங்களை வழங்கினர்.
பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அவரது சாட்சியாளர்கள் பட்டியலில் 15 சாட்சியாளர்கள் சாட்சியங்களை வழங்கவுள்ளதுடன், நேற்று முன்தினம் (23) பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
அத்துடன், இன்று சாட்சியங்களை வழங்கிய 4 சாட்சியாளர்கள் உள்ளடங்கலாக 5 சாட்சியாளர்கள் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அவர்களின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் அடங்கிய குழு நேற்று (25) மு.ப. 9.30 மணிக்குக் கூடியதுடன் பி.ப. 8.10 மணி வரை சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டது.
அதற்கமைய பிரதிவாதியான பொலிஸ்மா அதிபரின் சாட்சியாளர்கள் பட்டியலிலுள்ள ஏனைய சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்களைப் பெறுவதற்கு விசாரணைக் குழு இன்று (25) மு.ப. 9.30 மணிக்குக் கூடியது.

