அனுராதபுரம் – தம்புத்தேகம, நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாய் பகுதியில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

அனுராதபுரம் – தம்புத்தேகம, நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாய் பகுதியில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

அனுராதபுரம் – தம்புத்தேகம, நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாய் பகுதியில் நேற்று பிற்பகல் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் பெந்திவெவ மற்றும் திம்பிரிகஸ்கடவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் குறித்த பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலங்கள் தற்போது தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை திசாவெவவில் நீரில் மூழ்கிய நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவமும் நேற்று (18) பதிவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )