
இன்று முற்பகல் தப்பிச் சென்ற “ஷான் சுத்தா” பிற்பகலில் சிக்கினார்
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் “ஷான் சுத்தா” என அழைக்கப்படும் சம்பத் குமாரவை போலீசார் கைதுசெய்தபோது கூறிய ஆயுதத்தினால் போலீசாரை தாக்கினார்.
இதையடுத்து “ஷான் சுத்தா”வின் கால் பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதன் காரணமாக காயமடைந்த அவர் .
வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஷான் சுத்தா
இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார் .
தப்பிச் சென்ற ஷான் சுத்தா மொனராகலை , மல்லத்தாவல பிரதேசத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் மே மாதம் 30 ஆம் திகதி வெல்லவாய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரரான “ஷான் சுத்தா” என அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
“ஷான் சுத்தா”வுக்கு எதிராக நீதிமன்றினால் 5 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

