காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை தேர்தல் பிரச்சார வருமானம் செலவின அறிக்கைகளை ஆய்வு செய்யும் வாய்ப்பு

காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை தேர்தல் பிரச்சார வருமானம் செலவின அறிக்கைகளை ஆய்வு செய்யும் வாய்ப்பு

7 ஆம் திகதி முதல் அனைத்து வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை ஆய்வு செய்ய அல்லது முறைப்பாடு செய்ய எந்தவொரு நபருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது .

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அனைத்து வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்களால் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கை தொடர்பில் இந்த அறிவிப்பை ஆலைக்குழு வெளியிட்டுள்ளது .

தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 7 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் ஆய்வுசெய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது .

எந்தவொரு நபரும் அலுவலக நாட்களில் , காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை குறித்த அறிக்கையின் நகல்களைப் பார்வையிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது .
இந்தத் தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் 2023 ஆம் ஆண்டு 3 ஆம் எண் தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 6 இன் படி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )