
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் மகபேற்று விடுதி மீண்டும் செயற்பட நடவடிக்கை
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் மகபேற்று விடுதி மீண்டும் செயற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுகுட்பட்ட சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் மகபேற்று விடுதியின் செயற்பாடுகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது .
இதனால் அப்பிரதேசத்தில் இருக்கும் கர்ப்பிணி தாய்மார்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.
இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பலத்த சிரமங்களை எதிர் நோக்க வேண்டியேற்பட்டது ..
இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிரான் சுகாதார வைத்திய அதிகாரியும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் வைத்தியருமான எஸ்.சிவலக்சன் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவந்ததார் ,
அத்துடன் வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையின் மகபேற்று நிபுணர் வைத்தியர் திலக்சன் (vog) வைத்தியசாலையின் மகபேற்று விடுதியை நேரடியாக பார்வையிட்டதுடன் மகபேற்று விடுதியினை மீள இயக்குவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்நிலையில் இந்த வைத்தியசாலையில் மகபேற்று விடுதி மீண்டும் இயங்குவதற்கான முயற்சிகளை கிரான் சுகாதார வைத்திய அதிகாரியும் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியருமான சி.சிவலக்சன் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

