பிரதமர் ஹரிணியை பதவி மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை

பிரதமர் ஹரிணியை பதவி மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை

பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பிரதமர் ஹரிணியை பதவி மாற்றம்செய்யவிருப்பதாகவும் அமைச்சரவையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்பட்டுத்துவதற்காக எதிராளிகளால் திட்டமிட்டு போலி செய்திகள் பரப்பப்படுவதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பிலோ அமைச்சர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் எந்தவகையிலும் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கூறினார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )