தாய்லாந்து போதைப்பொருள் வழக்கு ; 23 பிக்குகளுக்கு விளக்கமறியல்

தாய்லாந்து போதைப்பொருள் வழக்கு ; 23 பிக்குகளுக்கு விளக்கமறியல்

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ வகை போதைப்பொருட்களை கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 23 சந்தேகநபர்கள் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தாய்லாந்துக்குச் சென்றிருந்த 22 பிக்குகள் ஏப்ரல் 25ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 112 கிலோ குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது, அமிதானந்தா என்ற பிக்கு இந்த சட்டவிரோத நடவடிக்கையை ஒருங்கிணைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், அவர் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மறைந்து இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 23பிக்குகளும் நீதிமன்ற உத்தரவின்படி 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )