நாடளாவிய ரீதியில் 42 பகுதிகள் டெங்கு அதி-அபாய வலயங்களாக அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 42 பகுதிகள் டெங்கு அதி-அபாய வலயங்களாக அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 42 பகுதிகள் டெங்கு நோய் பரவக்கூடிய அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 27,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு காய்ச்சலால் இதுவரை 14 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

டெங்கு பாதிப்பு அதிகம் பதிவாகிய மாவட்டங்களாக மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 5,930 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 4,465 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,572 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், வீடுகள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் நீர் தேங்கும் இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )