காலி சிறைச்சாலையில் உரிமையாளர்களற்ற கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் மீட்பு

காலி சிறைச்சாலையில் உரிமையாளர்களற்ற கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் மீட்பு

காலி சிறைச்சாலையின் A, B மற்றும் C, D சிறைக்கூடங்களில் நேற்று (03) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, உரிமையாளர்களற்ற நிலையில் இருந்த கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்களை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

19 கையடக்கத் தொலைபேசிகள்,11 சிம் (SIM) அட்டைகள்,
58 சிறிய ஹெரோயின் பொதிகள் (பொலித்தீன் உரையுடன் ஒவ்வொரு போதிக்கும் 4 கிராம் 384 மில்லி கிராம் எடை கொண்டது)அத்துடன்
ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 106 கிராம் 350 மில்லி கிராம் எடை கொண்ட 01 பெரிய பொதி ஆகியன இதன்போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன .

மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சிறைச்சாலை அத்தியட்சகரின் பொறுப்பில் எடுக்கப்பட்டது.

சிறைச்சாலை தலைமையகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைக்காக காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )