
திருகோணமலை கடலில் இழுத்துச் செல்லப்பட்ட 7 பேரை பாதுகாப்பாக மீட்ட பொலிஸ் உயிர் மீட்பு பிரிவு மற்றும் கடற்படை
திருகோணமலைக்கு சுற்றுலா வந்த யாத்திரிகர்கள் குழுவொன்று இன்று பிற்பகல் நிலாவெளி கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரோட்டத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.
இவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட ஏழு பேரை பொலிஸ் உயிர்மீட்புப் பிரிவினரும் கடற்படை கடற்கரை பாதுகாப்புப் படையினரும் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.
கடலில் நீராடிக்கொண்டிருந்த சிலர் நீரோட்டத்தில் சிக்கி உதவி கோரி கூச்சலிட்டதை அடுத்து, உடனடியாக செயற்பட்ட உயிர்மீட்புப் பிரிவினர் அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில், ஐவர் தேறியுள்ளனர். எனினும், மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இருவர் 1990 ஆம்புலன்ஸ் சேவை மூலம் நிலாவெளி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொலிஸ் உயிர்மீட்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ருவன் ஜயவர்தனவின் வழிகாட்டலில்,
பொலிஸ் பிரிவு: சார்ஜன்ட் பிரசன்ன (38935), கான்ஸ்டபிள்களான சிசிர (84616) மற்றும் குணவர்தன (100113). ஆகிய அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்
மேலும் கடற்படை கடற்கரை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த : கடற்படை வீரர்களான செனவிரத்ன (XX85419) மற்றும் ஆரியசேன (XX82902)ஆகியயோரும் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் வரகாபொல, தோலங்கமுவ மற்றும் அபேபுஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
ஒரே குழுவாக யாத்திரை வந்த இவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

