சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் ஒருவர் மரணம்                                                                62 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் ஒருவர் மரணம் 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேர் பாதிப்பு

நாட்டின் பல மாவட்டங்களைப் பாதித்துள்ள சீரற்ற காலநிலையால்
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (13) காலி 10.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 17 பேர் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 39 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் னர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )