கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் பேருந்துகள் மோதி விபத்து

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் பேருந்துகள் மோதி விபத்து

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் இன்று (13) காலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (CTB) சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக அந்தப் பிரதான வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்திற்குப் பின்னர் சம்பவ இடத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் இடத்துக்கு விரைந்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் காயமடைந்தோர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )