
இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள், நடத்துனர்கள்
எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை போக்குவரத்து சபையின் 25 டிப்போக்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 750 புதிய சாரதிகளையும், நடத்துநர்களையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை மீண்டும் கட்டமைக்கப்பட்டு இலாபகரமான நிறுவனமாக மாற்றப்படும்” என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

