
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில்
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலை அனுமதிக்காக இன்று (24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (23) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் 2025.09.21ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2454/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலே பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.
இலங்கை பாராளுமன்றம்

