
அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன
இலங்கை கிரிக்கெட்டால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் மழைப் பொழிவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கிளப்புகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ‘பி’ பிரிவு இருபது20 கிரிக்கெட் போட்டி மற்றும் ஆளுநர் கோப்பைப் போட்டி ஆகியவையும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மழைப் பொழிவு குறைந்த பின்னர் திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணைகள் அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, இன்று நடைபெறவிருந்த தடகளத் தேர்வுப் போட்டியும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தடகள சங்கம் அறிவித்துள்ளது.

