நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ கனமழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ கனமழை

இலங்கையைச் சூழவும் உருவாகியிருக்கும் தாழமுக்க நிலை அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் சென்று படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் , சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் , சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் மற்ற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )