இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தயார்-அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தயார்-அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நிச்சயமாக நடைபெறும் என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

இன்று (15) கண்டியில் ஊடகங்களிடம் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. அவை தாமதமாகும் என்று யார் சொன்னது? இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. கவலைப்பட வேண்டாம். எப்போது என்று எங்களால் கூற முடியாது. அமைச்சு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. அது இந்த ஆண்டுக்குள் நடைபெறும்” என அமைச்சர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )