
ஹுனுப்பிட்டிய ரயில் தண்டவாளத்தில் இருந்து ஆணியை அகற்றி விபத்தை ஏற்படுத்திய நபர் கைது
ஹுனுப்பிட்டிய – வனவாசல பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று காலை (16) ரயில் விபத்து நடந்த இடத்தில், ரயில் தண்டவாளத்தில் இருந்து ஆணியை அகற்றியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை பெலியகொட பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் ஒரு தீவிர போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொலிசார் கூறுகின்றனர்.
ரயில் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்ட ஆணியை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்றவர் இந்த சந்தேக நபர்தான் என பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணையை பொலிசார் தொடங்கியுள்ளனர்.
இன்று காலை (16) களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் பாதையில், ரயில் தடம் புரண்டு ஒரு பெட்டி கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர் .
ரயில்வே திணைக்கள அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் விசாரணையைத் தொடங்கியபோது தணடவாளத்தின் ஆணி கழற்றப்பட்டமை தெரியவந்துள்ளது.

