உள்நாட்டு வருவாய் சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

உள்நாட்டு வருவாய் சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பை அனுமதித்து வரி முறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட வரி சீர்திருத்தங்களை உள்ளடக்கிய, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் உள்நாட்டு வருவாய் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த தீர்மானம் 19-05-2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, திருத்தப்பட்ட மசோதா வரைவாளர் மூலம் தயாரிக்கப்பட்டு, அதற்கான சட்டமா அதிபரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக உள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் முன்மொழிவின் பேரில், குறித்த மசோதாவை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க அமைச்சர்கள் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த சட்டத் திருத்தங்கள் நாட்டின் வரி அமைப்பை வலுப்படுத்துவதோடு, அரசின் வருவாயை நிலைநாட்டுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )