
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் கொள்ளுப்பிட்டியில் சீன நாட்டவர் கைது
வரி செலுத்தப்படாமல் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 540 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கொள்ளுப்பிட்டி , நிமல்கப் பூங்காவில்35 வயதான சீன நாட்டவர் ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு நடத்திய சோதனையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கொள்ளுப்பிட்டி பொலிசார் சம் பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

