
தலதா மாளிகை யாத்திரைக்கு வருகைதரும் பக்தர்களின் வாகனங்களை இலகுவில் அடையாளம் காணும் வகையில் ஸ்டிகர் ஒன்று அறிமுகம்
தலதா மாளிகை யாத்திரைக்கு வருகைதரும் பக்தர்களின் வாகனங்களை இலகுவாக அடையாளம் கண்டு, வாகன தரிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தலதா மாளிகை யாத்திரைக்காகப் புறப்படும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கரை வழங்குமாறு இலங்கை பொலிஸ் தலைமையகம் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளது.
தலதா மாளிகைக்கு வருகைதரும் பக்தர்கள் இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்பக்க இடது மூலையின் மேல் தெளிவாகத் தெரியும் வகையில், சாரதியின் பார்வைக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒட்டப்பட வேண்டும் என்றும் பொலிஸார் கேட்.டுக்கொண்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

