கொழும்புக்கு திரும்பும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

கொழும்புக்கு திரும்பும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து தங்களது சொந்த ஊர்களிலிருந்து கொழும்புக்குத் திரும்பும் பயணிகளின் வசதிக்காக விசேட போக்குவரத்து சேவைகள் இன்று (28) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்புக்குத் திரும்பும் பயணிகளுக்காக பல மாகாணங்களில் இருந்து பேருந்து சேவைகளை இயக்கத் தயாராக இருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சங்க வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதனுடன், நீண்ட தூர சேவைகளுக்காக மேலதிக பேருந்து பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இன்று கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, டிசம்பர் 30 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் விசேட ரயில் ஒன்று புறப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )