
கெப் வாகன விபத்தில் இருவர் பலி
மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற கெப் வாகன விபத்தில் இருவர் உயிரிழந்த்துள்ளனர்.
மிஹிந்தலை வெல்லமோரண பிரதேசத்தில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் வீதியை விட்டு விலகி கால்வாயில் மோதி விபத்துக்குளாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 37 வயதுடைய அநுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

