
நேர்த்திக்கடன் தூக்குக்காவடி உழவியந்திரத்துடன் குடைசாய்ந்து இருவர் காயம்
முல்லைத்தீவில் ,நேர்த்திக் கடனுக்கான தூக்குகாவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவியந்திரப் பெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்தனர்.
முல்லைத்தீவு – குமுழமுனை பகுதியிலுள்ள கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின்போது ஆலய வளாகத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இதன்போது நேர்த்திகடனை நிறைவேற்ற குமுழமுனை கற்பக பிள்ளையார் ஆலயத்தில் இருந்து தூக்குக் காவடியுடன், கொட்டுகிணற்று பிள்ளையார் ஆலயத்தை நோக்கி செல்ல முற்பட்டபோது உளவியந்திர பெட்டி திடீரென குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
காயமடைந்த இருவரும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

