
நீதிமன்றத் தீர்ப்புகளின் பிரதிகளை, சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு வழங்குமாறு கட்சிகளுக்குஅறிவிப்பு
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்த அரசியல் கட்சிகள் , மனுக்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் பிரதிகளை, சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் தேத்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கும்
, கட்சிகளின் செயலாளர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் பல சுயேச்சைக் குழுக்களின் பல வேட்பு மனுக்கள், சமாதான நீதவான்களின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் அரசியலமைப்பின் 7 வது அட்டவணையின் கீழ் செய்யப்பட்ட சத்தியப் பிரமாணம் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் காரணமாக நிராகரிக்கப்பட்டன.
இந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன .
அதன்படி, மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளின் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

