நாளைமுதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு வழங்கப்படும் ,ஞாயிறன்றும் வாக்காளர் அட்டை விநியோகம்

நாளைமுதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு வழங்கப்படும் ,ஞாயிறன்றும் வாக்காளர் அட்டை விநியோகம்

நாளைமுதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்படுவதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார் .

20ஆம் திகதி ஞாயிறன்றும் வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

இம்மாதம் 29ஆம் திகதிக்கு பிறகும் வாக்குச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் , அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று தங்கள் அடையாளத்தைப் உறுதிப்படுத்துவதனூடாக வாக்குச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளமுடியுமென தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார் .

இதேவேளை ,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

R .M A. L ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்

227 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 22, 23, 24 ஆகிய தினங்களில் நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தினங்களில் வாக்களிக்க முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )