இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ;  5 பேர் பலி

இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ; 5 பேர் பலி

சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் இரசாயன தொழிற்சாலையில் நேற்று (28) மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 6 பேர் மாயமாகினர்.

அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )