அமைதிப் பேச்சுவார்த்தைக்காக – அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை பாகிஸ்தான் பயணம்

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக – அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை பாகிஸ்தான் பயணம்

ஈரான் உடனான பதற்றமான சூழலுக்கு மத்தியில், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை (ஏப்ரல் 20) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு செல்லவுள்ளனர்.

” ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதன் மூலமும், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலமும் ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறிவிட்டது . பிரான்ஸ் நாட்டு கப்பல் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சரக்குக் கப்பல் ஆகியவற்றைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதன் மூலம் ஈரானுக்கு ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. ஆனால், அமெரிக்காவுக்கு இதனால் எந்த இழப்பும் இல்லை. உலக நாடுகளின் கப்பல் போக்குவரத்து இப்போது அமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா மற்றும் அலாஸ்காவை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றன. ஈரான் விரைவில் பொருளாதார ரீதியாகச் வீழ்ச்சியடையும். அவர்கள் முறையான ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால், கடந்த 47 ஆண்டுகளில் எந்த அமெரிக்க ஜனாதிபதி செய்யாத கடுமையான நடவடிக்கைகளை நான் எடுக்க நேரிடும்.” என ஜனாதிபதி ட்ரம்ப் தனது ‘Truth Social’ தளத்தில் பதிவிட்டுள்ளார் .

ஈரான் உடனான இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க, அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை மாலை இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர்.

ஈரானின் அதிகபட்சக் கோரிக்கைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து இதில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )