வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி : சேப்பாக்கத்தில் இன்று களமிறங்குவாரா தோனி ?

வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி : சேப்பாக்கத்தில் இன்று களமிறங்குவாரா தோனி ?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முக்கியமான ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பமானதிலிருந்து தோனி இதுவரை எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தவலைப்பயிற்சியில் தோனி நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மைதானத்தின் பல திசைகளிலும் அதிரடியாக பந்துகளை அடித்த காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சேப்பாக்கம் மைதானம் தோனியின் கோட்டையாக கருதப்படுவதுடன், கடந்த இருபது ஆண்டுகளாக இந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்காக பல மறக்க முடியாத வெற்றிகளை அவர் பெற்றுத் தந்துள்ளார்.

இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால், இது தோனி விளையாடும் கடைசி போட்டியாக இருக்குமா என்ற கேள்வியும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதேவேளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

+0.207 என்ற ரன் ரேட்டுடன் உள்ள சிஎஸ்கே அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பை தக்கவைக்க இன்று சன்ரைசர்ஸ் அணியுடன் மோதப்போகும் போட்டியின் வெற்றி மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது.

இக்கட்டான சூழ்நிலையில் தோனியின் அனுபவமும் வழிகாட்டுதலும் அணிக்கு முக்கிய பங்காற்றும் என ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

எனினும், தோனி விளையாடுவது தொடர்பில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )