அம்பாறையில் துப்பாக்கிச் சூடு

அம்பாறையில் துப்பாக்கிச் சூடு

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை நேற்றிரவு (17) கைது செய்ய சென்றபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, கைது செய்ய முயன்ற பொழுது சந்தேகநபர் கடமை நிறைவேற்றிய அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததோடு, அவர்களைத் தாக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து அவர் பொலிஸாரால் கட்டுப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பியோட முடிந்துள்ளது.

இதற்கிடையில், நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீண்டும் சந்தேகநபரைக் கைது செய்ய முயன்றபோது, அந்த உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க சந்தேகநபர் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த தருணத்திலேயே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதுடன், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )