
இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) பிற்பகல் 4.00 மணி முதல் இன்று (24) பிற்பகல் 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கலவானை, இரத்தினபுரி, நிவித்திகலை, பெல்மதுளை மற்றும் எஹலியகொடை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
TAGS Divisional Secretariat DivisionsKurunegalaLandslide warningNational Building Research InstituteRatnapuraSri lanka

