உடும்பிராயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

உடும்பிராயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவாக, உடும்பிராயில் அமைந்துள்ள விடுதலை போராளி பொன். சிவகுமாரின் சிலை அருகில் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பத்தில் பொன். சிவகுமாரின் சிலைக்கு மாலை அணிவித்துப் பின், முள்ளிவாய்க்கால் நினைவாக பொதுச் சூடாத ஏத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. மேலும், 100 பொதுமக்களுக்கு அரிசி பொதிகளும் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரிமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள்,
பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )